இலங்கை சுற்றுலா பயணியிடம் 2 லட்சம் ரூபாவை கொள்ளையடித்த யானை

No Rating
33518dcf00000578-3547455-yala_national_park_where_these_pictures_were_taken_is_also_home_-a-8_1461060734103

இலங்கை சுற்றுலா பயணி ஒருவருக்கு யானை ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யால தேசிய பூங்காவில் ஜுப் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிக்கு சொந்தமான பை ஒன்றை கெமுனு என்ற யானை விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெமுனு தனது தும்பிக்கையை ஜுப் வண்டியினுள் விட்டு அந்த பையை விழுங்கியுள்ளது.

சுற்றுலா பயணிகளின் ஜுப் வண்டியில் இருந்து பொருட்களை எடுத்துக் கொள்வதற்கு கெமுனுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பையில் 1200 அமெரிக்க டொலர் (கிட்டத்தட்ட 180000ரூபாய்) இருந்ததாக சுற்றுலா பயணிகள் வனவிலங்கு அதிகாரிகளிடம் அறிவித்துள்ளனர்.

அதற்கு மேலதிகமாக அந்த பையில் கமரா ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags

0 thoughts on “இலங்கை சுற்றுலா பயணியிடம் 2 லட்சம் ரூபாவை கொள்ளையடித்த யானை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song