விஜய் படத்தில் வடிவேலு நடிக்க இது தான் காரணமா?

No Rating
vijay-vadivelu

காமெடியில் கொடிகட்டிப்பறக்கும் நடிகர் வடிவேலுவை ஹீரோ என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளார். சில வருடங்களுக்கு முன் அரசியல் காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் பின் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று வந்தார்.

சமீபகாலமாக சினிமாவில் மீண்டும் காமெடியனாக நடிக்க துவங்கிய அவர், இதற்குமுன் விஜய்யுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே தெறி படத்தில் நடிக்க அட்லீ அவரை கேட்ட போது 4 கோடி சம்பளம் கேட்டதால் தான் அதிலிருந்து இயக்குனர், தயாரிப்பாளரிடம் கேட்டுவிட்டு வருகின்றேன் என்று விலகியதாக கிசுகிசுக்கப்பட்டது.

அதனால் தான் அவருக்கு பதிலாக அப்படத்தில் ராஜேந்திரன் நடித்தார் எனவும் சொல்லப்பட்டது.

ஏற்கனவே வந்த வாய்ப்பு நழுவிபோனதால் என்னவோ, வடிவேலு மீண்டும் அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யுடன் நடிக்க ஒப்புக்கொண்டது ஆச்சர்யமாக உள்ளது.

ஒரு வேளை சம்பளத்தை குறைத்து விட்டாரோ என இப்போது கிசுகிசுக்கபடுகிறது.

Tags

0 thoughts on “விஜய் படத்தில் வடிவேலு நடிக்க இது தான் காரணமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song