இணையதளத்தில் வெளியான பாகுபலி 2 கிளைமாக்ஸ்! வீடியோ எடிட்டர் அதிரடி கைது

No Rating
rr

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என பலர் நடிப்பில் சரித்திர படமாக பாகுபலி வெளியாகி உலகளவில் பயங்கர வெற்றி பெற்றது.

இன்னும் நன்கு போய்க்கொண்டிருக்கும் நிலையில் முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என ராஜமௌலி விட்டுச்சென்ற கேள்விக்கு பதிலுக்காக ரசிகர்கள் 2 ம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பாகுபலி 2 இல் அனுஷ்கா, பிரபாஸ் நடிக்கும் கிளைமாக்ஸ் 2 போர்க்காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிரவைத்தது.

இது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. தகவல் அறிந்த படக்குழு உடனே அதை இணையத்திலிருந்து நீக்கிவிட்டு, தீவிர விசாரணையை தொடர்ந்தது.

பயங்கர பாதுகாப்பிற்கு நடுவே எப்படி இது நிகழ்ந்தது என கடுமையாக விசாரித்து பின் நம்பிக்கை துரோகம் செய்ததற்காக இதன் வீடியோ எடிட்டர் மீது ஹைதராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவரை கைது செய்துள்ளார்கள்.

இதனால் ராஜமௌலி மிகவும் டென்ஷனாக உள்ளார்.

Tags

0 thoughts on “இணையதளத்தில் வெளியான பாகுபலி 2 கிளைமாக்ஸ்! வீடியோ எடிட்டர் அதிரடி கைது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song