சென்னை 28 II இன்னிங்ஸ் – ரிலீஸ் எப்போது?

No Rating
maxresdefault-4

தல அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை எடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் சென்னை 28 பார்ட் 2.

முன்பு போல அதே கூட்டணியில் அதே நடிகர்கள் என களமிறங்கியிருக்க படம் ரசிகர்களுக்கு பார்ட் 1ஐ விட என்ன சொல்லப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

தற்போது நவம்பர் 10ல் வெளியாவதாக இருந்த இப்படம் சில சூழ்நிலைகளால் நவம்பர் 25க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு தணிக்கை குழு “U” சான்றிதழ் வழங்கியுள்ளது. வயது வரம்பின்றி அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இது உள்ளது.

அதே நாளில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ள கத்திச்சண்டை காமெடி படமும் வெளிவருகிறது.

இரு படங்களிலும் காமெடிக்கு குறைவில்லை. எனவே சாதனை செய்யப்போவது எது என இப்போதே போட்டிகள் ஆரம்பமாகிவிட்டது.

Tags

0 thoughts on “சென்னை 28 II இன்னிங்ஸ் – ரிலீஸ் எப்போது?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song