கைகள் நடுங்க, அச்சத்துடன் ஒபாமாவை சந்தித்த டொனால்ட் டிரம்ப்

No Rating
rtx2t2gn

அமெரிக்க நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் முதன் முறையாக ஒபாமாவை நேரில் சந்தித்தபோது ஒருவித அச்சத்துடன் இருந்ததாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டவுடன், அவர் தற்போதைய ஜனாதிபதியை வெள்ளை மாளிகையில் நேரடியாக சந்திப்பது அந்நாட்டின் பாரம்பரிய மரபாகும்.

இந்நிலையில், ஜனாதிபதியாக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நேற்று முன் தினம் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார்.

சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு இருவரும் ஒன்றாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

அப்போது, ‘வரும்காலங்களில் ஒபாமாவுடன் இணைந்து தனது பணியை சிறப்பாக செயல்படுத்துவேன்’ என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

‘என்னுடைய குழுவுடன் இணைந்து மக்கள் பணி செய்யவுள்ள டொனால்ட் டிரம்பை மிகவும் பாராட்டுகிறேன்’ என ஒபாமா பதிலளித்துள்ளார்.

ஆனால், இருவரின் இந்த வரலாற்று மிக்க சந்திப்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உடல்மொழி வல்லுனரான(Body Language Expert) Patti Wood என்பவர் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது, ‘அரசு முறைப்படி இருவரும் நேரடியாக சந்தித்துக்கொண்டாலும் கூட, இந்த சந்திப்பில் ஒரு உயிரோட்டம் இல்லை.

சம்பர்தாயத்திற்காக நடைபெற்ற ஒரு சந்திப்பாக தோன்றுகிறது. ஏனெனில், டொனால்ட் டிரம்பை சந்தித்தபோது ஒபாமாவின் கண்களில் மகிழ்ச்சி இல்லை. ஒருவித ஏமாற்றமும், அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கவலையும் அவரது கண்களில் இருந்ததை பார்க்க முடிந்தது.

எனினும், ஒரு ஜனாதிபதி இருக்கையில் எப்படி அமர்ந்திருக்க வேண்டுமோ, அப்படியே ஒபாமா கம்பீரமாக அமர்ந்துள்ளார்.

ஆனால், முதல் முறையாக ஒபாமாவை நேரில் சந்தித்த டொனால்ட் டிரம்ப் ஒருவித கலக்கத்துடனும், பரபரப்புடன் காணப்பட்டார்.

குறிப்பாக, டொனால்ட் ட்ரம்ப் தனது இருக்கைகளையும் கீழ் நோக்கி வணங்குவது போல் வைத்துள்ளார்.

இதன் மூலம், அவர் ஒருவித நடுக்கத்துடனும், அச்சத்துடன் இருந்திருக்கலாம்.

தனது வாழ்க்கையில் முழு நேரத்தையும் தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த டொனால்ட் டிரம்ப் தற்போது அனுபவம் இல்லாத அரசு உயர் பொறுப்பில் அமரவுள்ளதால் அந்த அச்சம் ஏற்பட்டிருக்கலாம்’ என Patti Wood கருத்து தெரிவித்துள்ளார்.

Tags

0 thoughts on “கைகள் நடுங்க, அச்சத்துடன் ஒபாமாவை சந்தித்த டொனால்ட் டிரம்ப்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song