சிவகார்த்திகேயன் போல சம்பளம் வாங்காமல் நடித்த மற்றொரு பிரபல நடிகர்!

No Rating
maxresdefault-2

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் தள்ளிகொண்டே போய் கடைசியில் சிரமத்திற்கு நடுவே எப்படியோ வெளியாகி ஹிட் கொடுத்து அவரை மிக சந்தோசமாக்கியது.

படம் வெளி வருவதற்காக அவர் தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்தார் என்று சிலருக்கு தெரியும்.

வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது காஞ்சிவரம் படத்துக்கு பின் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் சில சமயங்களில் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையாக இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

தேவி படத்தை இயக்கிய ஏ,எல்,விஜய் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் மற்றும் பலர் நடிக்க இளையராஜா இசையமைத்துள்ளார்.

இது எய்ட்ஸ் குறித்த தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக படம் உள்ளது. எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்ளும் நபராக பிரகாஷ்ராஜ், சோதனை முடிந்து ரிப்போர்ட்க்காக காத்திருக்கும் வேளையில் அவரது மனதின் குரலே படத்தின் பிரதிபலிப்பு.

முழுக்க முழுக்க சமூக சிந்தனையோடு, லாபமற்றதாக எடுக்கப்படும் இப்படத்திற்கு பிரகாஷ் ராஜ் சம்பளம் வாங்கவில்லையாம்.

Tags

0 thoughts on “சிவகார்த்திகேயன் போல சம்பளம் வாங்காமல் நடித்த மற்றொரு பிரபல நடிகர்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song