பொண்டாட்டிடா’ டப்ஸ்மாஷ் பெண்ணைச் சந்தித்த ரஜினி!

No Rating
Rajini

‘கபாலிடா…”  என்று ‘கபாலி’ டீஸரில்  ரஜினி பேசிய வசனத்தை உலகம் முழுக்க 3-கோடி மக்கள் பார்த்து ரசித்தனர். டப்ஸ்மாஷிலும்  வைரலடித்தது அந்த வசனம். பலரும் தங்கள் மேனேஜருக்கு, பாஸுக்கு, நண்பனுக்கு, எதிரிக்கு என்று டப்ஸ்மாஷ் கிளப்ப, தமிழில் ஒரு பெண்   ‘பொண்டாட்டிடா..’  என்று பேசி நெட்டில் பரவவிட்ட ஒரு டப்ஸ்மாஷ் டரியல் வைரலானது. தன் பார்வைக்கு வந்த அந்த வீடியோவை  ரஜினியும் பார்த்து ரசித்தார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய உடனே அந்த  பெண்ணை சந்திக்க ஆசைப்பட்டார். சோ விரும்பியதின் பேரில்  ‘கபாலி’  ப்ரிவ்யூ காட்சியில் கலந்து கொண்ட ரஜினியை, உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவர்கள் கடிந்து கொண்டனர்.  ஆகவே வெளியுலக சந்திப்பை தவிர்த்து வந்தார் ரஜினி.

நேற்று  ‘கபாலிடா’ டயலாக் பேசிய அந்தப் பெண்ணை  நேரில் பார்க்க ஆசைப்பட்டார், ரஜினி. அதன்படி  திடீரென  அந்த பெண்ணுக்கு ரஜினி வீட்டிலிருந்து போன் வர, எதிர்முனையில் இருந்த பெண்ணுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ரஜினியே லைனில் வந்து  நேரில் பார்க்க விரும்புவதாகச் சொல்ல ஆனந்தத்தில் திக்குமுக்காடி விட்டார்.  அதன்படி  சென்னை சேமியர்ஸ் சாலையில் இருக்கும்  தனுஷ் வீட்டில்  அந்த பெண்மணி ரஜினியை சந்தித்தார்.  ரஜினியை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள லட்சம்பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்க ரஜினி ஆர்வமாக அந்த பெண்ணுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்

‘கபாலிடா…’ டயலாக்கை மாற்றி ‘பொண்டாட்டிடா…’ என்று பேசும் எண்ணம் எப்படி வந்தது.. இந்த டயலாக்கைக் கேட்டுவிட்டு உங்கள்  உறவினர், நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்று ஆர்வமாக கேட்டார், ரஜினி.  வைரல் வீடியோ டயலாக்கில் கணவர்கள் சமூகத்தை  கண்டபடி சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டிய அந்த பெண்மணி வெட்கத்தோடு தலைகுனிந்து ரஜினிக்கு பதில் சொன்னதை  பார்த்து ரஜினிமகள் ஐஸ்வர்யா ரசித்தார்.

Tags

0 thoughts on “பொண்டாட்டிடா’ டப்ஸ்மாஷ் பெண்ணைச் சந்தித்த ரஜினி!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song