அதிக தண்ணீர்…காலை உணவு முக்கியம்: ஆரோக்கிய வாழ்க்கைக்கான வழிகள்!

No Rating
Life_Health_Financial

1. Do not skip Breakfast (காலை உணவை தவிர்க்காதீர்கள்)

நம்மில் பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பவர்கள் உள்ளனர். அவசரமாக பள்ளிக்கும் பணிக்கும் செல்பவர்கள். விரதம் காரணமாக தவிர்ப்பவர்கள். டீ, காபி போன்ற பானங்கள் எதாவது அருந்திவிட்டு காலை உணவை மதியத்துக்கு தள்ளிப்போடுபவர்கள். காலை உணவின் அவசியத்தை உணர வேண்டும்.

காலை உணவுதான் அந்தநாள் முழுதுக்குமான சக்தியை அளிக்க வல்லது. மேலும், காலை உணவுதான் உடலில் சர்க்கரை அளவையும், எடை இழப்பையும் தடுக்கிறது. காலை உணவை தவிர்ப்பவர்கள் உடலாடிப்போய் சீக்கிரத்தில் நோயாளி ஆகிவிடுகின்றனர்.

2. Drink Plenty of Water (அதிக தண்ணீர் குடியுங்கள்)

தண்ணீர் அருந்துவது பற்றிய அக்கறை இல்லாதவர்கள் உடல் பாதிக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.

நம் உடலில் தீங்கான உப்புகள், விஷத்தன்மையான ரசாயனங்கள் இருந்தாலும் அதிக தண்ணீர் அருந்துவதால், வியர்வையாகவும் சிறுநீராகவும் எளிதாக வெளியேற்றப்படுகிறது.
ரத்த ஓட்டமும் சுத்திகரிப்பும் சீராக இருப்பதால் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

3. Eat Healthy Food (ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்)

பழங்கள் நிறைய சாப்பிடலாம். அனைத்துவிதமான காய்கறிகள், தானியங்கள், மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகளான மீன், கோழி, பீன்ஸ் போன்றவையும் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது.

4. Enough Sleep (அளவான தூக்கம்)

முதல்நாள் போல அடுத்த நாளும் நம்மை புத்துணர்வோடு செயல்பட வைப்பது இடையில் வரும் இரவில் நாம் கொள்கிற தூக்கம்தான். அந்த தூக்கம் இல்லையேல் அடுத்தநாள் துக்கம்தான்.

குறைந்தது ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது ஆழ்ந்த தூக்கம் கொண்டால்தான் நமது உடலும் மனமும் உற்சாகமுடன் இருக்கும்.

எல்லா விடயங்களுக்கும் ஏதாவது ஒரு மாற்று இருக்கும் ஆனால், தூக்கத்துக்கு நிகர் தூக்கம்தான் ஓய்வை கூட ஒப்பிட முடியாது. மனதை சுதந்திரமாக விட்டுவிட்டு நாம் படுத்தால் போதும் ஆழ்ந்த தூக்கம் நம்மை தழுவ காத்திருக்கும்.

5. Exercise (உடற்பயிற்சி)

நமது அன்றாட வேலைகளுக்கு ஏற்ப ஏதவது உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. தசையை வலிமைப்படுத்தும் கடினமான வெயிட்லிப்ட் பயிற்சிகள் அவசியமில்லை.

கை, கால்களை வீசி செய்யும் கருவிகள் இல்லாத பயிற்சியே போதுமானது. தினம் அரை மணிநேரம் நடந்தால் கூட சரியே.

அதனால், ரத்த ஓட்டம் துரிதப்படும். கழிவுகள் சரியாக வெளியேற, நல்ல பசி, தூக்கம் பெற, கொழுப்பு கரைய, கலோரிகள் செலவாக உதவும்.

உடற்பயிற்சியால், எந்த வயதிலும் இளமை வேகத்துடன் செயல்பட முடியும்.

Tags

0 thoughts on “அதிக தண்ணீர்…காலை உணவு முக்கியம்: ஆரோக்கிய வாழ்க்கைக்கான வழிகள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song