விரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் மிகவும் மெலிதான மடிக்கணினி

No Rating
apple-laptop-1

அப்பிள் நிறுவனமானது கடந்த வருட இறுதியில் 12 அங்குல அளவினை உடைய Ultra Thin மடிக்கணினியினை அறிமுகம் செய்திருந்தது.

இந் நிலையில் எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் 13 அங்குல அளவு மற்றும் 15 அங்குல அளவுகளை உடைய Ultra Thin மடிக்கணினிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட 12 அங்குல மடிக்கணினி ஆனது Silver, Gold மற்றும் Space Grey ஆகிய 3 வர்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள மடிக்கணினிகள் இவற்றிற்கு மேலாக Rose Gold வர்ணத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் ஜுன் மாதம் இடம்பெறவுள்ள Worldwide Developer மாநாட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags

0 thoughts on “விரைவில் அறிமுகமாகின்றது அப்பிளின் மிகவும் மெலிதான மடிக்கணினி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song