டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பிஸ்கட்டின் தற்போதைய விலை என்ன தெரியுமா?

No Rating
_86304833_5d48122d-3d46-46fb-a603-a80a71dcf732

இங்கிலாந்தில் உள்ள சவுத் தாம்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு சென்ற உலகின் மிகப்பெரிய கப்பலான டைட்டானிக் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பயணிகள், கப்பல் ஊழியர்கள், கேப்டன் உட்பட 1,503 பேர் பலியாகினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த கப்பலில் பயணம் செய்த முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான மெனு கார்டு ஆல்லைன் மூலம் ரூ.5.82 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் பிழைத்த மற்றொரு பயணியிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்கட் ஒன்று பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நேற்று ஏலம் விடப்பட்டது. இது கடலில் பயணிப்பவர்களுக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்ட பிஸ்கட் ஆகும். ஹென்றி ஆல்ட்ரிஜ் அன்ட் சன் என்ற அமைப்பு இதற்கான ஏலத்தை நேற்று லண்டனில் நடத்தியது. இதை லண்டனைச் சேர்ந்த கலைப்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் 23 ஆயிரம் டாலருக்கு (இலங்கை மதிப்பில் 30 லட்சத்து 95 ஆயிரத்து 723 ரூபாய் ) ஏலம் எடுத்துள்ளார்.

இதனால் உலகிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன பிஸ்கட் என்ற பெருமையை இந்த பிஸ்கட் பெற்றுள்ளது. ஒரு வேளை அதன் உரிமையாளர் இந்த பிஸ்கட்டை சாப்பிட்டால் உலகில் மிகவும் விலை மதிப்புள்ள பிஸ்கட்டை சாப்பிட்டவர் என்ற பெருமையை பெறுவார் என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags

0 thoughts on “டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பிஸ்கட்டின் தற்போதைய விலை என்ன தெரியுமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song