சரித்திர படத்தில் அஜித் நடிக்க போகிறாரா ?

No Rating
0016-thala-ajith-arrambam-official-stills-016

தமிழ்சினிமா வில் தற்போதைய ட்ராண்ட் சரித்திர படங்கள். பாகுபலி யின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தமிழில் முன்னணி நட்சத்திரமான விஜய் கூட சரித்திரம் கலந்த பாண்டஸி படமான புலி படத்தில் நடித்து விட்டார்.

இந்நிலையில் மிகவிரைவில் அஜித்தும் சரித்திர படத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அதை இன்னும் உறுதி செய்யும் வகையில் விஷ்ணு வரதன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் செய்துள்ளார்.

அதாவது என்னுடைய அடுத்த படத்துக்கான விவாதத்தில் எழுத்தாளர் பாலகுமாரன் அய்யாவுடன் இருக்கிறேன். இரண்டு பேரும் காலம் கடந்த கதையில் விவாதித்து வருகிறோம் விரைவில் அறிவிக்கிறேன் என்று ட்விட் போட்டுள்ளார்.

ஏற்கனவே சிவா படத்துக்கு பிறகு அஜித் யாருடன் இணைய போகிறார் என்ற செய்தி இன்னமும் உறுதி செய்யவில்லை. கோடம்பாக்கத்தில் உலவி வரும் தகவல் படி அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என்கிறார்கள்.

அப்படி அவர் இணைந்தால் அவர் நடிக்கும் போகும் சரித்திர படம் இதுவாக தான் இருக்கும், மேலும் பாலகுமாரன் எழுதிய கங்கை கொண்ட சோழன் மற்றும் உடையார் போன்ற நாவல்கள் பற்றி தான் அவர்களின் விவாதமும் நடந்து வருவதாக தகவல்.

Tags

0 thoughts on “சரித்திர படத்தில் அஜித் நடிக்க போகிறாரா ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song