நயன்தாராவுடன் நெருங்கி நடித்த ஹீரோ காதலர் அப்செட்

No Rating
Nayanthara-and-Jiivas-New-Movie-Thirunaal-Stills-800x400
எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘ஈ’ படத்தில் ஜீவாவுடன் நடித்தார் நயன்தாரா. நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் ‘திருநாள்’ படத்தில் இணைகின்றனர். பி.எஸ்.ராமநாத் இயக்குகிறார். இவர் கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ பட இயக்குனர். ஏற்கனவே ‘ரவுத்திரம்’, ‘சிங்கம் புலி’ படங்களில் ரவுடியாக நடித்த ஜீவா மீண்டும் இதில் ரவுடி வேடம் ஏற்கிறார். பள்ளிக்கூட டீச்சராக நயன்தாரா நடிக்கிறார்.

மாடர்ன் வேடங்களிலேயே நடித்து வரும் நயன்தாரா இதில் கிராமத்து பெண் வேடம் ஏற்கிறார். இதன் படப்பிடிப்பு கிராம பகுதிகளில் நடக்கிறது. சமீபத்தில் மரத்தின் அருகில் நின்றிருக்கும் நயன்தாராவிடம் ஜீவா நெருங்கும் காதல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நயன்தாராவை ஜீவா அலெக்காக தூக்கி மரத்தின் மீது ஏற வைக்கும் காட்சி படமானது.

காட்சிக்காக நயன்தாராவை தூக்கிய ஜீவா காட்சி முடிந்த பின்னும் அவரை தூக்கிக்கொண்டு பட குழுவினரை வட்டமடித்தார். நயன்தாராவை ஜீவா தூக்கிக்கொண்டு ஓடுகிறார் என்று ஒரு சிலர் கமென்ட் செய்ய, ‘இல்லப்பா இதோ இறக்கிவிட்டுட்டேன்’ என நயனை கீழே இறக்கிவிட படப்பிடிப்பு அரங்கே கலகலப்பானது. இதை அறிந்து நயன்தாராவின் காதலரான டைரக்டர் விக்னேஷ் சிவன் அப்செட் ஆனதாக கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள்.

Tags

0 thoughts on “நயன்தாராவுடன் நெருங்கி நடித்த ஹீரோ காதலர் அப்செட்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song