ஈபிள் கோபுரம் முன் நிர்வாணமாக ’செல்பி’ எடுத்த சுவிஸ் மொடல்: சிறையில் அடைத்த பொலிசார்

No Rating
eiffel1

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல மொடல் அழகி ஒருவர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரம் முன் நிர்வாணமாக செல்பி எடுத்த குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸ் நாட்டு குடிமகளான Milo Moire(31) என்ற மொடல் அழகி, தன்னுடைய உடல் அழகை நிர்வாணமாக காட்டி, அதன் மூலம் பிரபலமான கலைகளை மக்களிடையே பரப்பி வருவதில் பிரபலமானவர்.

சுவிட்சர்லாந்து நாடு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து, புகழ்பெற்ற இடங்களில் நிர்வாணமாக செல்பி எடுப்பது இவரது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று, பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகருக்கு வந்த அவர், உடம்பில் துணியில்லாமல் முழு நிர்வாணமாக ஈபிள் கோபுரம் முன்னால் நின்று செல்பி படம் எடுத்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் ஈபிள் கோபுரத்திற்கு கீழே உள்ள Trocadero பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து நிர்வாணமாக செல்பி படங்களை எடுத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில், ஆண் மற்றும் பெண்கள் தங்களுடைய அந்தரங்க உறுப்புகள் தெரியும் விதமாக பொது இடங்களில் உலா வந்தால், ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் யூரோக்களும் அபராதமாக விதிக்கப்படும்.

ஆனால், சுவிஸ் நாட்டை சேர்ந்த மொடல் அழகியை கைது செய்த பொலிசார், அவரிடம் அபராதம் எதிவும் வசூலிக்காமல், ஒரு இரவு மட்டும் காவலில் வைத்து விட்டு நேற்று விடுதலை செய்து விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அந்த மொடலின் மேலாளரான Peter Palm, அவர் கலையின் மீதுள்ள ஆர்வத்தில் தான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த உண்மையான காரணத்தை தெரிந்துக்கொள்ளாமல் பொலிசார் அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும், சுவிஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளிலும் இதுபோன்று நிர்வாணமாக செல்பி எடுத்ததை அந்த நாட்டு பொலிசார் எந்த கைது நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என அந்த மேலாளர் கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “ஈபிள் கோபுரம் முன் நிர்வாணமாக ’செல்பி’ எடுத்த சுவிஸ் மொடல்: சிறையில் அடைத்த பொலிசார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song