தீபாவளிக்கு மோதும் நட்சத்திரங்கள்

No Rating
Kollywood-news-12696
பெரிய நட்சத்திரங்களின் படங்களை பண்டிகை தினங்களில் வெளியிட வேண்டும் என்று சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி வரும் தீபாவளி தினத்தில் 3 பிரபலபங்கள் மோத தயாராகின்றனர்.
உத்தமவில்லன், பாபநாசம் என கமல் நடித்த 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. அடுத்து அவரது உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்து வருகிறார் கமல். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ‘தூங்காவனம்’ படத்தை தீபாவளி விருந்தாக வெளியிடலாம் என பட குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
அடுத்து அஜீத் நடிக்கும் 56வது படம் சிவா இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது 3ம் கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடக்கிறது. இப்படம் தீபாவளி தினத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் திட்டமிட்டிருக்கிறார்.
‘அஞ்சான்’, ‘மாசு’ என சூர்யா படமும் குறுகிய கால இடைவெளியில் வெளிவந்தது. 2 படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை. அடுத்து வரும் படம் ஹிட்டாக அமைய வேண்டும் என்பதில் ரொம்பவே குறியாக இருக்கிறார் சூர்யா. விக்ரம் குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘24’ படத்தை இன்னும் 2 மாதத்தில் முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். வேகமாக செயல்பட்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய எண்ணி உள்ளனர்.

Tags

0 thoughts on “தீபாவளிக்கு மோதும் நட்சத்திரங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song