வகுப்பறையில் செல்போனில் ஆபாசபடம் பார்த்த 7 மாணவிகள்

No Rating
Teen+girls+with+mobile+phones

கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் செல்போன் மூலம் 7 மாணவிகள் ஆபாசபடம் பார்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில், கடந்த 3ம் திகதி, 7ம் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, வகுப்பறையில் கடைசி பெஞ்சில் இருந்த மாணவிகள் பாடத்தை கவனிக்காமல், சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த ஆசிரியை அருகில் சென்று போது மாணவிகள் செல்போனை பயன்படுத்தியது தெரியவந்தது.

அந்த செல்போனை ஆசிரியை பறிமுதல் செய்தபோது, திகைத்து போன மாணவிகள், செல்போனை தருமாறு கெஞ்ச தொடங்கியுள்ளனர்.

ஆசிரியை, தலைமை ஆசிரியையிடம் செல்போனை ஒப்படைக்கப் போவதாக தெரிவித்த போது, அந்த மாணவிகள் ‘மரியாதையாக செல்போனை கொடுங்கள்’ என மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து அந்த ஆசிரியை, நடந்த சம்பவத்தை சக ஆசிரியையிடம் கூறியபோது, 2 பேரும் சேர்ந்து செல்போனில் உள்ளதை பார்த்து அதிர்ர்சியடைந்துள்ளனர்.

ஏனெனில், அதில், ஆபல ஆபாச படங்களும், பாலுணர்வை தூண்டும் வகையிலான வாசகங்களும் இடம் பெற்றிருந்தது.

எனவே இச்சம்பவம் குறித்து, பள்ளி தாளாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, செல்போன் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் 7 மாணவிகளிடம் நடத்தப்பட்ட. விசாரணையில், கோடை விடுமுறையில் பேஸ்புக்கில் கணக்கு துவங்கிய மாணவிகள் இண்டர்நெட் மையங்களில் ஆபாசபடங்களை பதிவிறக்கம் செய்ததும், அவற்றை தோழிகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.
மேலும், பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை வரவழைத்து மாணவிகளை எச்சரித்து அனுப்பியதோடு, 7 மாணவிகளையும் ஒரு வார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

Tags

0 thoughts on “வகுப்பறையில் செல்போனில் ஆபாசபடம் பார்த்த 7 மாணவிகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song