களைகட்டும் “நாய் கறி திருவிழா”: 10,000 நாய்களை ஒரே நாளில் கொன்று ருசிக்கும் சீனர்கள்

No Rating
dog-in-a-net1

சீனாவில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படும் ‘நாய் கறி திருவிழா’வில் சுமார் 10 ஆயிரம் நாய்களை ஒரே நேரத்தில் கொன்று சமைத்து ருசித்து உண்ணும் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

சீனாவின் Guangxi என்ற மாகாணத்தில் Yulin என்ற சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

விநோத பழக்க வழக்கங்களை கொண்ட இந்த மக்கள் தங்களை ஆவிகள் கொடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ள கடந்த 2010ம் ஆண்டிலிருந்து ‘நாய் கறி திருவிழா’ என்ற ஒரு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

எதிர்வரும் யூன் 21ம் திகதி தொடங்க உள்ள இந்த திருவிழாவின்போது, அந்த மாகாணம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்களை பிடித்து வந்து பூஜை செய்வார்கள்.

பின்னர், ஒவ்வொரு நாயையும் கும்பல் கும்பலாக கொன்று நெருப்பில் சுட்டு எரித்து துண்டுகளாகவும் முழு நாய்களாகவும் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வைக்கின்றனர்.

இந்த பகுதியில் வாழும் Yulin சமுதாய மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் அன்று நாய் கறி விருந்து அமோகமாக நடைபெறும். இந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் நாய்கள் கொல்லப்பட்டு இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவார்கள்.

சில ஆண்கள் நாய்கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என நம்புவதால், அவர்கள் இந்த உணவை விரும்பி ருசித்து வருகின்றனர்.

சீனர்களின் இந்த காட்டுமிராண்டி தனமான செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருந்தாலும், Yang Xiaoyun(65) என்ற சமூக ஆர்வலர் இந்த திருவிழாவில் கொல்லப்படும் நாய்களை மீட்க பல வழிகளில் போராடி வருகிறார்.

இந்த திருவிழா தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தனது Tianjin நகரத்திலிருந்து 1.652 மைல்கள் பயணித்து Yulin நகரத்திற்கு சென்று, நாய்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் அவற்றை விலை பேசி வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.

தற்போது வரை சுமார் 15,178 பவுண்டுகள் செலவழித்து சுமார் 360 நாய்கள் மற்றும் பல பூனைகளை காப்பாற்றி தனது இடத்தில் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார்.

இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் நாய் கறி திருவிழா உற்சாகமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பகுதிக்கு பல வகை நாய்களை அதிக எண்ணிக்கையில் கும்பல் கும்பலாக வாகனங்களில் அடைத்து கொண்டு வருவதால் ‘ராபிஸ்’ எனப்படும் நோய் அதிக அளவில் பரவி வருவது அந்த சமுதாய மக்களுக்கு பெரிதாக தெரியவில்லை.

சீனாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்பட்டு உணவாக சமைக்கப்படுவதுடன் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ராபிஸ் நோய் தாக்கி சுமார் 338 பேர் இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

0 thoughts on “களைகட்டும் “நாய் கறி திருவிழா”: 10,000 நாய்களை ஒரே நாளில் கொன்று ருசிக்கும் சீனர்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song